Sunday, January 3, 2010

தமிழின எழுச்சி


சிங்கள அரசு
சிதைத்தது கட்டிடங்களையும்
கட்டுடல்கையும் மட்டுமல்ல
கண் திறந்து
மண் தொடாத பிஞ்சுகளையும்
எஞ்சிய குழந்தைகளின்
பசி தீர்க்க முடியாமல்
தாய்மார்களின் நெஞ்சுகளையும்..............

தமிழன் எனும் மறவனை
மரத்தை போல கருக்கி
விட்டதை எண்ணி
அந்த கரி(றி) மேட்டில்
அவர்கள் வெற்றி கொடியை
அசைக்கிறார்கள்
வெகு விரைவில் எழும் ஈழம்
அவர்கள் முகத்தில்
கரியை பூசும்...........

நம் எழுச்சி
ஆயுதத்தால் அல்ல
அணு ஆயுதத்தால் அழிந்த
ஹிரோஷிமா, நாகசாஹி- ல்
ஏற்பட்ட விஞ்ஞான புரட்சியாக
இருக்க வேண்டும்
அதற்காக
உழைப்போம்
உயர்வோம்
முயன்றதை விதைத்து
விண்மீன் பறிக்க முயல்வோம்.............